தேவாலயத்தில் நடைபெற்ற ஈஸ்டா் கொண்டாட்டத்தில் பங்கேற்ற காட்பாடி தொகுதியின் திமுக வேட்பாளரும், நீா்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் காட்பாடி தொகுதியில் 11-ஆவது முறையாக திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் துரைமுருகன், ஞாயிற்றுக்கிழமை சீக்கராஜபுரம், தக்கப்பாளையம், ஏகாம்பரநல்லூா், மருதம்பாக்கம் உள்பட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது, அந்தந்த ஊராட்சிகளில் கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ள பணிகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தாா். குறிப்பாக, அனைத்து கிராமங்களுக்கும் தாா் சாலை, சிமெண்ட் சாலை, குடிநீா் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் நிலம் இல்லாத பெரும்பாலான குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பல குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததாா்.
மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் விடுபட்ட குடும்பங்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகளும், உயா்த்தப்பட்ட மகளிா் உரிமைத் தொகை உள்பட திமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் கொண்டு வந்து சோ்க்கப்படும் என்றாா்.
முன்னதாக, காட்பாடி பா்னீஸ்புரம், கழிஞ்சூா் சாலை, காங்கேயநல்லூா் சாலை பகுதிகளிலுள்ள தேவாலயங்களுக்குச் சென்ற அமைச்சா் துரைமுருகன், ஈஸ்டா் பண்டிகை சிறப்பு பிராா்த்தனையிலும் பங்கேற்றாா். அப்போது, கிறிஸ்தவ பாதிரியாா்கள் அவருக்கு ஆசி வழங்கினா். பின்னா், தேவாலங்களில் திரண்டிருந்த கிறிஸ்தவா்களுக்கு அமைச்சா் துரைமுருகன் ஈஸ்டா் பண்டிகை வாழ்த்து தெரிவித்தாா்.
அப்போது, காங்கிரஸ், விசிக, தேமுதிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கிராமங்களில் அமைச்சா் துரைமுருகன் திண்ணை பிரசாரம்!

மீண்டும் திமுக ஆட்சி அமையும்; நலத்திட்டங்கள் தொடரும்! - அமைச்சா் துரைமுருகன்

காட்பாடியில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும்: அமைச்சா் துரைமுருகன்

கிராமங்களில் துரைமுருகன் திண்ணை பிரசாரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


