ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக போதிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தோல் ஏற்றுமதி அதிகளவில் நடைபெறுவதால் மத்திய அரசின் ஏற்றுமதி சிறப்பு அந்தஸ்து நகரம் என்று, ஆம்பூர் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு தோல் தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.
இதனால் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 1,500-இல் இருந்து 2,000 வரையில் நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. இந்த மருத்துவமனையில் 10-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 3 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் நோயாளிகளுக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைப்பதில்லை.
பணியில் இருக்கும் மருத்துவர்களில் சிலர் நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்வதில்லை. எரிச்சலுடன் பேசுவதால் நோயாளிகள் மன வருத்தத்துக்கு உள்ளாகின்றனர்.
இந்நிலையில், 3 மாதம் கர்ப்பமாக இருந்த பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை சிகிச்சைக்காக மருத்துவமகைக்குச் சென்றார்.
ஆனால் இரவு 10 மணி வரை சிகிச்சை அளிக்காமல் அப்பெண்ணை காக்க வைத்துள்ளனர். அதன் பிறகு அவரை வீட்டிற்கு செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். வீட்டிற்கு செல்லும் வழியில் அப்பெண்ணுக்கு கருகலைந்தது. அதனால் அப்பெண் மருத்துவமனைக்கு திரும்ப அழைத்துவரப்பட்டு, இரவு 12 மணிக்கு மேல் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
ஆனால், புதன்கிழமை காலை 11 மணி வரை அப்பெண்ணுக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அப்பெண் அனுப்பி வைக்கப்பட்டார்.
இவ்வாறான நிலையில் நோயாளிகள் பலர் தனியார் கிளீனிக்குகளை நாடி செல்ல வேண்டியுள்ளது. இதநால் அவர்களுக்கு கூடுதல் செலவும் ஏற்படுகின்றன.
எனவே, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களை நியமித்து ஏழை, எளிய மக்களுக்கு தேவையான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

