ராணிப்பேட்டை: சென்னை- பெங்களூரு இடையே ரூ. 16,680 கோடி செலவில் ஆறுவழிச் சாலை (எக்ஸ்பிரஸ்வே) அமைக்கும் திட்டம் தொடங்குவது எப்போது என தொழிற்துறையினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாட்டில் பெருகி வரும் வாகனப் போக்குவரத்தை சமாளிக்கும் நோக்கில், பெரு நகரங்களை இணைக்கும் வகையில் "எக்ஸ்பிரஸ்வே' திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் இருந்தது. இதன்படி, சுமார் 1000 கி.மீ. தொலைவுக்கு நாட்டில் உள்ள பெரு நகரங்களை இணைக்கும் வகையில் ஆறுவழிச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டது.
அதன்படி, தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் 6-இன் கீழ் ரூ. 16,680 கோடி செலவில் சென்னை- பெங்களூரு நகரங்களிடையே ஆறுவழிச் சாலை அமைக்கும் திட்டத்துக்கு கடந்த 2009-இல் மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
சென்னை- பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே எனப்படும் ஆறுவழிச் சாலை திட்டத்தில், இரு நகரங்களை மட்டும் பிரதானமாக இணைக்கும் வகையில் சர்வதேசத் தரத்தில் சாலை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக ஒரு கி.மீ. தூரத்துக்கு சுமார் ரூ. 18 முதல் ரூ. 20 கோடி செலவிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு, தனியார் - பொதுத்துறை பங்களிப்புடன் இத்திட்டத்தைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டுமானம்- இயக்கம்- மாற்றுதல் (பி.ஓ.டி.) என்ற அடிப்படையில், சென்னை- பெங்களூரு என்.எச்-4 தேசிய நெடுஞ்சாலையில் கோலார், பாலமனேரு, சித்தூர், ராணிப்பேட்டை வழியாக அமைக்கப்பட உள்ள ஆறுவழிச் சாலைத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், சென்னையில் இருந்து பெங்களூரை சுமார் 120 கி.மீ. வேகத்தில் மூன்று மணிநேரப் பயணத்தில் சென்றடையலாம்.
இவ்விரு நகரங்களிடையே பயண நேரம் குறைவதுடன், பயணத் தொலைவிலும் சுமார் 86 கி.மீ. மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ராணிப்பேட்டை தொழில் நகரம் புத்துயிர் பெற்று, தொழில், வேலைவாய்ப்புகள் பெருகும் என்று தொழிற்துறையினர் நம்புகின்றனர். இந்தத் திட்டம் 2015-ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஆறுவழிச் சாலை அமைக்கும் பணி மந்தமாகவே நடைபெற்று வருகிறது.
எனவே தொழிற்துறைக்குப் புத்துயிர் அளிக்கும் ஆறுவழிச் சாலை திட்டம் இந்த ஆண்டிலாவது தொடங்குமா என்று தொழிற்துறையினர் கேள்வி எழுப்புகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாமக வேட்பாளா் பாலு பிரசாரம்!

தெற்கு லெபனானில் சிலுவை அவமதிப்பு: இஸ்ரேல் வீரருக்கு வலுக்கும் கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

