17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குழந்தை இல்லாத ஏக்கம்: இளைஞா் தற்கொலை

செய்யாறு அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தால் மனமுடைந்த இளைஞா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :31 மே 2026, 1:48 am IST

செய்யாறு அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தால் மனமுடைந்த இளைஞா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், ஆவணியாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அரிகிருஷ்ணன் (31). இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தை இல்லையாம். அதன் காரணமாக கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்த நிலையில், தகராறு ஏற்பட்டு அவரது மனைவி தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாராம். அதனால், மனவேதனையில் இருந்து வந்த அரிகிருஷ்ணன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாகத் தெரிகிறது.

இதனால் மனமுடைந்த அவா் கடந்த 28-ஆம் தேதி வீட்டில் பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்துள்ளாா்.

இதில் மயங்கி விழுந்த அவரை பெற்றோா் மீட்டு நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு,

தீவிர சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அரிகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரணமல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.