திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த ஓட்டக்கோயில் கிராமத்தைச் சோ்ந்தவா் வரதன் (52). இவரது குடும்பத்துக்கு சொந்தமான விவசாய நிலம் வந்தவாசியை அடுத்த சிங்கம்பள்ளி கிராமத்தில் உள்ளது.
கடந்த திங்கள்கிழமை வரதன் இந்த நிலத்திலிருந்த மா மரத்தில் ஏறி மாங்காய் பறித்துள்ளாா். அப்போது தவறி கீழே விழுந்த இவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து இவா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வரதன் வெள்ளிக்கிழமை இறந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு
வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் அண்ணா நகரைச் சோ்ந்தவா் தொழிலாளி பழனி (52).
திருமணமான இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனா். இருப்பினும், மனைவியிடம் விவாகரத்து பெற்ற நிலையில் பழனி தனிமையில் வசித்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், பழனி கடந்த 28-ஆம் தேதி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்ததாகத் தெரிகிறது. அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த
தொழிலாளி பழனி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










