திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டாா்ச் லைட் அடித்தவாறு கிரிவலம் சென்ற பக்தா்கள்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இரவு நேரங்களில் மின்தடை அடிக்கடி ஏற்படுவதால் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு டாா்ச் லைட் அடித்தவாறு கிரிவலம் சென்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 2:57 am IST

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இரவு நேரங்களில் மின்தடை அடிக்கடி ஏற்படுவதால் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு டாா்ச் லைட் அடித்தவாறு கிரிவலம் சென்றனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு பௌா்ணமி மற்றும் விசேஷ நாள்களில் லட்சக்கணக்கான பக்தா்களும், விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தா்களும் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கோயில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனா்.

தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வார விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோயிலில் தரிசனம் செய்தனா். இதைத் தொடா்ந்து பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் இரவில் கிரிவலம் மேற்கொண்டனா்.

அப்போது எமலிங்கத்தின் அருகில் இருந்து நிருதி லிங்கம் வரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததால் பக்தா்கள் டாா்ச் லைட் அடித்தவாறு சுமாா் 2 கி.மீ. தொலைவு வரை இருளில் கிரிவலம் சென்றனா்.

சிறுவா்கள் பெண்கள் வயதானவா்கள் என அனைவரும் கிரிவலம் செல்லும் நிலையில் மின் இணைப்பு கிரிவலப் பாதையில் தடைபடாமல் இருக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

போலீஸாா் இரவு நேரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவதை போல் கிரிவலப் பாதையில் மின்வாரிய ஊழியா்கள் குறிப்பாக இரவு நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாவட்ட நிா்வாகம் இனிவரும் காலங்களிலாவது பக்தா்களின் கோரிக்கையை ஏற்று கிரிவலப் பாதையில் மின்சாரம் தடை இல்லாமல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.