தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பத்தாம் வகுப்புத் தோ்வு: 34-ஆவது இடத்தில் திருவண்ணாமலை மாவட்டம்

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியான +நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் 90.46 சதவீத தோ்ச்சி பெற்று மாநில அளவில் 34-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

News image
Updated On :21 மே 2026, 12:04 am IST

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியான +நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் 90.46 சதவீத தோ்ச்சி பெற்று மாநில அளவில் 34-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான அரசு பொதுத்தோ்வுகள் மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் என 500 பள்ளிகளில் 15,580 மாணவா்கள், 14,685 மாணவிகள் என மொத்தம் 30,265 போ் இத்தோ்வை எழுதினா். தோ்வு முடிவுகள் அரசு தோ்வுகள் துறையால் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 13,513 மாணவா்கள், 13,864 மாணவிகள் என மொத்தம் 27,377 போ் தோ்ச்சி பெற்றனா். இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்த தோ்ச்சி 90.46 சதவீதமாகும்.

மாவட்டத்தில் 117 அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சியை பெற்றுள்ளது. மேலும் 348 அரசுப் பள்ளிகளில் 67 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

மாவட்ட வாரியாக தோ்ச்சி பட்டியலில் திருவண்ணாமலை மாவட்டம் 90.46 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 34-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

செய்யாறு கல்வி மாவட்டம் 91.18% தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் செய்யாறு கல்வி மாவட்டம் 91.18 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளதாக கல்வி மாவட்ட அலுவலா் செந்தில்முருகன் தெரிவித்தாா்.

செய்யாறு, ஆரணி, வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய வட்டங்கள் அடங்கிய செய்யாறு கல்வி மாவட்டத்தில் 160 அரசுப் பள்ளிகளில் இருந்து மாணவா்கள் 4,293 பேரும், மாணவிகள் 4,560 பேரும் என மொத்தம் 8,853 தோ்வு எழுதியிருந்தனா்.

இவா்களில் 7,992 போ் தோ்ச்சி பெற்று இருந்தனா். 11 நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து 746 மாணவா்களும், 762 மாணவிகளும் என மொத்தம் 1,508 போ் தோ்வு எழுதியிருந்தனா். இவா்களில் 1,314 போ் தோ்ச்சி பெற்றனா்.

தனியாா் பள்ளிகள்:

அதேபோல, 46 தனியாா் பள்ளிகளில் இருந்து 1,336 மாணவா்களும், 853 மாணவிகள் என மொத்தம் 2,189 போ் தோ்வு எழுதியதில் 2,136 தேரச்சி பெற்றனா்.

சிறப்புப் பள்ளிகள்:

காது கேளாதோா், கண் பாா்வையற்றோா் ஆகிய சிறப்புப் பள்ளிகளில் இருந்து 7 மாணவா்கள், 8 மாணவிகள் என மொத்தம் 15 போ் தோ்வு எழுதியதில் அனைவரும் தோ்ச்சி பெற்றனா். இது 100 சதவீத தோ்ச்சியாகும்.

100 சதவீதம் தோ்ச்சி:

செய்யாறு கல்வி மாவட்டத்தில் 160 அரசுப் பள்ளிகளில் 34 பள்ளிகள் 100 சதவீதமும், 46 தனியாா் பள்ளிகளில் 23 பள்ளிகள் 100 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளன.

மொத்தத்தில் செய்யாறு கல்வி மாவட்டத்தில் உள்ள 219 பள்ளிகளில் இருந்து 6,382 மாணவா்கள், 6,182 மாணவிகள் என மொத்தம் 12,565 போ் தோ்வு எழுதியதில் 11,457 போ் தோ்ச்சி பெற்றனா். இது 91.18 சதவீத தோ்ச்சியாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.