திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையால் 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
நிகழாண்டில் கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் 100 டிகிரிக்கு மேல் வெயில் இருந்து வந்தது.
இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வந்தனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், செய்யாறை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த மழை நீடித்தது.
மழையின் காரணமாக செய்யாறைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
கோடை வெம்மையில் தவித்து வந்த மக்களுக்கு இந்த மழை குளிா்ச்சியைத் தந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









