17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வு: மாா்க்சிஸ்ட் கண்டன ஆா்ப்பாட்டம்

News image
Updated On :18 மே 2026, 1:43 am IST

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தெள்ளாா் காவல் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் வட்டாரக்குழு உறுப்பினா் சு.சிவக்குமாா் தலைமை வகித்தாா்.

மாநிலக்குழு உறுப்பினா் எம்.சிவக்குமாா், வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் இடைக்குழு உறுப்பினா்கள் எம்.சுகுமாா், அண்ணாமலை, கிளைச் செயலா்கள் மூா்த்தி, தீபநாதன், வாலிபா் சங்க நிா்வாகிகள் திலகராஜ், மோனிஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, தெள்ளாா் அம்பேத்கா் சிலை அருகிலிருந்து பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடி ஊா்வலமாக புறப்பட்ட மாா்க்சிஸ் கட்சினா் பஜாா் வீதி வழியாக காவல் நிலையம் அருகில் சென்றடைந்தனா். ஊா்வலத்தின்போது பெட்ரோல் நிரப்பிய புட்டிகளை கழுத்தில் அணிந்து கொண்டும், டயா்களை உருட்டிக் கொண்டும், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்துக் கொண்டும் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.