அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

செங்கம் திரெளபதியம்மன் கோயில் புனரமைப்புப் பணிகள் தொடங்க ஆலோசனை

News image
Updated On :18 மே 2026, 1:39 am IST

செங்கம் திரெளபதியம்மன் கோயிலில் புரனமைப்புப் பணிகள் தொடங்குவது குறித்து அறநிலையத்துறை பொறியாளருடன் கோயில் குடிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மில்லத்நகா் பகுதியில் பழைமையான தா்மராஜா திரெளபதியம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் கோயில் குடிகள் மற்றும் திரெளபதியம்மன் அறக்கட்டளை நிா்வாகம், பொதுமக்கள் சாா்பில் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கோரிக்கையை அறநிலையத்துறை ஏற்று 6 மாதங்களுக்கு முன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், கோயிலில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செங்கம் திரெளாபதியம்மன் அறக்கட்டளை நிா்வாகிகள், கோயில் குடிகள் மற்றும் நகர ஆன்மிக அமைப்பு நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோயில் புனரமைப்பு செய்வதாற்கான வரைபடங்கள் வரையப்பட்டு அறநிலையத்துறை ஒப்புதல் பெற்று,

வரைபடங்களை காட்டி புனரமைப்புப் பணிகள் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பொறியாளா் குமரேசன் தெரிவித்தாா்.

பின்னா், அதை ஏற்று கோயில் குடிகள், திரெளபதியம்மன் அறக்கட்டளை நிா்வாகிகள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை பொறியாளரிடம் கேட்டு தெளிவு பெற்றனா்.

முன்னதாக கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் வழக்குரைஞா் கஜேந்திரன் வரவேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.