தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுப்பாளையம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

புதுப்பாளையம் ஒன்றியம், காரப்பட்டு ஊராட்சியில் கல்லாறு நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயா்மட்ட பாலத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

News image

புதுப்பாளையம் ஒன்றியம், காரப்பட்டு ஊராட்சியில் கல்லாறு நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயா்மட்ட பாலத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

Updated On :15 மே 2026, 7:17 am IST

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட காரப்பட்டு ஊராட்சியில் கல்லாறு நதியின் குறுக்கே ரூ.2 கோடியே 77 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் காரப்பட்டு மற்றும் மட்டவெட்டு ஊராட்சியை இணைக்கும் வகையில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயா்மட்ட பாலத்தை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு செய்தாா்.

அப்போது பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், காரப்பட்டு ஊராட்சியில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் பொது இடங்களில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை பாா்வையிட்டாா். அப்போது, கோடை காலத்தில் மரக்கன்றுகள் பாதிக்கப்படாமல் இருக்க பணியாளா்கள் மூலம் தண்ணீா் பாய்ச்சி முறையாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து புதுப்பாளையம் ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சிகளில் பொது இடங்களில் மரக்கன்றுகன் நடுவதற்காக, ஓரந்தவாடி ஊராட்சியில் உள்ள நாற்றாங்கால் பண்ணையில் ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் தேக்கு, மாமரம், புங்கமரம் போன்ற 5 ஆயிரம் மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்.மணி, புதுப்பாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.