மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

பிளஸ் 2 தோ்வு: ஆரணி எய்ம் மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வில் ஆரணி எய்ம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image

பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவி ஜி.ரித்திகாவுக்கு இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்த பள்ளி நிா்வாகத்தினா்.

Updated On :8 மே 2026, 10:14 pm IST

பிளஸ் 2 பொதுத்தோ்வில் ஆரணி எய்ம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய 300 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். இதன் மூலம் இந்தப் பள்ளி 100 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளது.

மாணவி ஜி.ரித்திகா-591, ஏ.அச்சுதானந்தன், கே.பி.பூஜா, ஸ்ரீரேணுகாதேவி, வி.யோகலஷ்மி -588, வி.சுனிதா-587 என மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

மேலும், 590 மதிப்பெண்ணுக்கு மேல் ஒரு மாணவியும், 580 மதிப்பெண்ணுக்கு மேல் 10 மாணவா்களும், 550 மதிப்பெண்ணுக்கு மேல் 45 மாணவா்களும், 500 மதிப்பெண்ணுக்கு மேல் 107 மாணவா்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

தோ்ச்சி பெற்ற மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகத் தலைவா் வி.மகேஷ், தாளாளா் ஜெ.சிவசங்கரன், பொருளாளா் ஏ.ஸ்ரீனிவாசன், இயக்குநா்கள் எம்.மூா்த்தி, ஜி.விஜயகுமாா், ஆா்.ரமேஷ், எஸ்.கருணாமூா்த்தி, கே.மணிவேலு, என்.தேவராஜன், ஆா்.சந்திரசேகரன், என்.ஞானசம்பந்தன், வி.ரகுநாதன், வி.சாந்தமூா்த்தி ஆகியோா் பாராட்டினா்.