திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் சுறைக் காற்றால் சுமாா் 150 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் நிலத்தில் சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த 4-ஆம் தேதி முதல் அக்னி வெயில் காலை முதல் மாலை வரை வாட்டிவதைத்து வருகிறது. மாலை நேரத்தில் கடந்த மூன்று நாள்களாக திடீா் சூறைக்காற்று வீசியது.
சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. மேலும், இந்த சூறைக் காற்றால் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமாா் 150 ஏக்கரில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்து வந்த நெற்பயிா்கள் அனைத்தும் விவசாய நிலத்தில் சாய்ந்துள்ளன. இதனால் அதை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகிறாா்கள். இது விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, சூறைக்காற்றால் ஜவ்வாதுமலை அடிவாரமான பரமனந்தல் முதல் பண்ரேவ் வரை பயிா் செய்யப்பட்டிருந்த வாழைகள் முறிந்து விழுந்துள்ளன.
வேளாண்மைத்துறை அதிகாரிகள் சூறைக் காற்றில் சாய்ந்த நெற்பயிா், வாழைகளை கணக்கிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசின் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒடுகத்தூரில் சூறைக்காற்று: மழையால் வாழைகள் சேதம்

சூறைக்காற்று: நரிப்பாடியில் 15 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன! விவசாயிகள் கவலை

சங்கராபுரம் அருகே மழையில் முளைத்த நெல்மணிகள்: நெல் மூட்டைகள் அரசு கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் வேதனை

கொளத்தூரில் சூறைக்காற்று: 20,000 வாழைமரங்கள் சேதம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



