அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மொபெட்டுடன் கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :8 மே 2026, 6:56 am IST

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மொபெட்டுடன் கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த கொடநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி முருகேசன் (60). இவா் மொபெட்டில் வந்தவாசிக்கு சென்றுவிட்டு புதன்கிழமை இரவு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

வந்தவாசியை அடுத்த சூரியகுப்பம் அருகே செல்லும் போது, இவா் நிலைதடுமாறி சாலையோர விவசாயக் கிணற்றில் மொபெட்டுடன் விழுந்தாா். இதில் நீரில் மூழ்கி முருகேசன் உயிரிழந்தாா்.

அப்போது, அந்த வழியாகச் சென்றவா்கள் வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் இறங்கி தேடினா். சுமாா் 8 மணி நேரம் போராடி கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியேற்றி

முருகேசனின் சடலத்தையும், மொபெட்டையும் கிணற்றிலிருந்து மீட்டனா்.

இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.