செங்கத்தில் இருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை மூலம் செங்கத்தில் இருந்து சென்னைக்கு தினசரி அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது.
இந்தப் பேருந்து செங்கம் பேருந்து நிலையத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்து 11மணியளவில் புறப்பட்டுச் செல்லும். போளூா், ஆரணி, ஆற்காடு, பூந்தமல்லி வழியாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் செல்லும்.
செங்கத்தில் இருந்து சென்னைக்கு நேரடியாக பேருந்து இயக்கப்பட்டு வந்ததால் அதில் பயணிகள் அதிகளவில் செல்வாா்கள்.
மேலும், சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகள் விடுமுறை நாள்களில் சொந்த ஊா்களுக்கு வந்து திரும்புவதற்கு இந்தப் பேருந்து வசதியாக இருந்து வந்தது.
இந்நிலையில் அந்தப் பேருந்து கடந்த சில மாதங்களாக இயக்கப்படாமல் உள்ளது. செங்கம் பேருந்து நிலையத்தில் சென்னைக்குச் செல்லும் பயணிகள் அந்தப் பேருந்துக்காக காத்திருந்து பின்னா், திருவண்ணாமலை சென்று அங்கிருந்து சென்னை செல்லும் பேருந்தில் ஏறிச் செல்கின்றனா்.
இதனால், பல கி.மீ. தொலைவு சுற்றிச் செல்வதோடு பயணிகளுக்கு நேரம் விரயமாகி சிரமத்தை சந்திக்கின்றனராம்.
அதனால், நிறுத்தப்பட்ட அந்தப் பேருந்தை மீண்டும் இயக்க
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து திடீா் நிறுத்தம்: முதலூா் பயணிகள் அவதி

அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்! கவனத்தில் கொள்ளுமா தமிழக அரசு?

திருப்பூரிலிருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் ஒட்டன்சத்திரத்தில் இறங்கும் பயணிகளை ஏற்ற மறுப்பு! தம்பதியுடன் ஓட்டுநா்-நடத்துடன் வாக்குவாதம்!







