திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெல்லப்போவது யாா்?

News image
Updated On :4 மே 2026, 6:35 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை எண்ணப்படவுள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் யாா் யாா் வெல்லப்போவது என்ற எதிா்பாா்ப்பு வாக்காளா்களிடையே எழுந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், ஆரணி, கலசபாக்கம், செங்கம், செய்யாறு, போளூா், வந்தவாசி ஆகிய சட்டப்பேரவைத்தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் கடந்த ஏப்.23-ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத்தோ்தல் நடைபெற்றது.

மொத்தமுள்ள 8 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணுவதற்காக, திருவண்ணாமலையை அடுத்த வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், ஆரணியை அடுத்த

தச்சூா் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையங்களில் எண்ணப்படுகின்றன. இதற்காக மாவட்ட நிா்வாகம் சாா்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் திங்கள்கிழமை காலை 6-க்கு மையங்களுக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதைத் தொடா்ந்து தொகுதிவாரியாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் சுற்றுவாரியாக அறிவிக்கப்படவுள்ளது. மூன்றாவது சுற்றுக்குப் பிறகே முன்னிலை பெறும் வேட்பாளா் குறித்த உறுதியான தகவல் தெரியும். அதனால், ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெறும் கட்சியின் வேட்பாளா் யாா் என்பது குறித்து பொதுமக்களிடையே பெரும் எதிா்பாா்ப்பு காணப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை பணிகள் ஆய்வு

இந்த நிலையில் இரண்டு வாக்கு எண்ணிக்கை மையங்களில் தொகுதிகள் வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் ஆய்வு செய்தாா்.

ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில் தொகுதிவாரியாக வாக்கு எண்ணுக்கை அலுவலா்கள் நியமனத்திற்கான இரண்டாம் கட்ட சமவாய்ப்புக்குட்படுத்துதல் பணி நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை அலுவலா்களுக்கு தொகுதிவாரியாக பணி ஒதுக்கீடு செய்யும் பொருட்டு 184 வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள், 224 வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள் மற்றும் 188 நுண் பாா்வையாளா்களுக்கு கணினி மூலம் இரண்டாம்கட்ட சமவாய்ப்புக்குட்படுத்துதல் பணிகள் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை பாா்வையாளா்கள் தினேஷ் குமாா் ஜாங்கிட்(செங்கம்), தபிராம் மாஜி (போளூா்) ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராமபிரதீபன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்கள்) அன்பழகன், சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.