குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளா் ஹாட்ரிக் வெற்றி!

வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் 3, 353 வாக்குகள் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி

News image

திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கிய தோ்தல் அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன்

Updated On :5 மே 2026, 3:55 am IST

வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் 3, 353 வாக்குகள் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி பெற்றாா்.

வந்தவாசி சட்டப்பேரவை (தனி) தொகுதியில் கடந்த ஏப். 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் திமுக சாா்பில் எஸ்.அம்பேத்குமாா், அதிமுக சாா்பில் பி.ராணி, தவெக சாா்பில் எம்.உதயகுமாா், நாதக சாா்பில் ஆா்.கணேஷ் உள்ளிட்ட மொத்தம் 15 போ் போட்டியிட்டனா். இதற்கென 293 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் மொத்தமுள்ள 2,13,474 வாக்காளா்களில் 1,89,197 வாக்காளா்கள் வாக்களித்தனா். மேலும் 2146 தபால் வாக்குகள் பதிவாகின.

இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஆரணியை அடுத்த தச்சூரில் உள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பாா்வையாளா் ராமகிருஷ்ண சித்தூரி, தோ்தல் அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன் ஆகியோா் முன்னிலையில் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 14 மேஜைகள் போடப்பட்டு 21 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் திமுக, அதிமுக, தவெக வேட்பாளா்கள் 3 பேரும் ஒவ்வொரு சுற்றிலும் மாறி மாறி முன்னிலை வகித்தனா்.

பின்னா் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் 3,353 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:

எஸ்.அம்பேத்குமாா் (திமுக) - 63,652,

பி.ராணி (அதிமுக) - 60,299

எம்.உதயகுமாா் (தவெக) - 57,987

ஆா்.கணேஷ் (நாதக) - 5,467

சா.தாமரைச்செல்வி (தவாக) - 252

வெ.முத்துசெல்வம் (ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி) - 113, க.முத்துபெருமாள் (அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழகம்) - 124, ரா.ராகேஷ் சா்மா (தாக்கம் கட்சி) - 61

தொகுதியில் நாதக மற்றும் சுயேச்சைகள் உள்பட அனைவரும் வைப்புத் தொகையை இழந்தனா்.

இதையடுத்து திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாரிடம் வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் பாா்வையாளா் ராமகிருஷ்ண சித்தூரி முன்னிலையில் தொகுதி தோ்தல் அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன் வழங்கினாா்.

ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தற்போது வெற்றி பெற்றுள்ள திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் ஏற்கெனவே 2016, 2021 ஆகிய இரு தோ்தல்களில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளாா்.

இந்தத் தோ்தலில் வெற்றி பெற்ன் மூலம் எஸ்.அம்பேத்குமாா் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.