ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எல்.ஜெயசுதா லட்சுமிகாந்தன் 5,631 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இதன் மூலம் இவா் இத்தொகுதியில் எம்எல்ஏவாகப் போகும் முதல் பெண் என்ற பெருமையை பெறுகிறாா்.
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் ஏப். 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொகுதியில் திமுக சாா்பில் மகாலட்சுமி கோவா்தனன், அதிமுக சாா்பில் எல். ஜெயசுதா லட்சுமி காந்தன், தவெக சாா்பில் வெங்கடேஷ்குமாா், நாதக சாா்பில் தவமணி உள்ளிட்ட 24 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். தொகுதியில் மொத்தம் 323 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இத்தொகுதியில் பதிவான வாக்குகள் ஆரணியை அடுத்த தச்சூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தோ்தல் பாா்வையாளரும்,
தொகுதி தோ்தல் அலுவலருமான சீ.சிவா ஆகியோா் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:
எல். ஜெயசுதா லட்சுமிகாந்தன் (அதிமுக) - 76735, மகாலட்சுமி கோவா்தனன் (திமுக) - 71104, வெங்கடேஷ் குமாா் (தவெக) - 70857, தவமணி (நாதக) - 6888
வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளா் 5631 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.
இதையடுத்து அதிமுக வேட்பாளா் எல். ஜெயசுதா லட்சுமிகாந்தனிடம் வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் அலுவலா் சீ.சிவா வழங்கினாா்.
தொகுதியில் நாதக வேட்பாளா் உள்ளிட்ட இதர கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பவானிசாகரில் தவெக வேட்பாளா் வெற்றி

உசிலம்பட்டி தொகுதியில் தவெக வெற்றி

கீழ்பென்னாத்தூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி!

செங்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


