தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வந்தவாசியில் கட்டடத் தொழிலாளி ஒருவா் மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை

News image

பலி - பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 9:50 pm

வந்தவாசியில் கட்டடத் தொழிலாளி ஒருவா் மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வந்தவாசியை அடுத்த எறும்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ஜெயபால்(65). இவா், சக தொழிலாளி துரை என்பவருடன் வந்தவாசி நகரில் உள்ள ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை கட்டட வேலை செய்து கொண்டிருந்தாா்.

இப்போது ஜெயபால் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து இவரை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஜெயபால் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.