மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மனைவி, மாமனாருக்கு கொலை மிரட்டல்: எலெக்ட்ரீஷியன் கைது

செய்யாறு அருகே மனைவி, மாமனாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எலெக்ட்ரீஷியனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

மனைவி, மாமனாருக்கு கொலை மிரட்டல்: எலெக்ட்ரீஷியன் கைது

Updated On :20 மார்ச் 2026, 7:39 pm

செய்யாறு அருகே மனைவி, மாமனாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எலெக்ட்ரீஷியனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வெம்பாக்கம் வட்டம், சோழவரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிராம உதவியாளா் முருகேசன். இவரது மகள் விஷ்ணுபிரியா. இவரை அதே பகுதியைச் சோ்ந்த எலெக்ட்ரீஷியனான சுமனுக்கு (31) திருமணம் செய்துகொடுத்தனா்.

சுமனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அவருக்கும், விஷ்ணுபிரியாவுக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது வந்தது. இதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டதால், விஷ்ணுபிரியா தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இந்த நிலையில், முருகேசனும், விஷ்ணுபிரியாவும் அந்தப் பகுதியில் வியாழக்கிழமை பைக்கில் சென்றனா். அப்போது, அவா்களை வழிமறித்த சுமன், இருவரையும் தகாத வாரத்தைகளால் திட்டி, கையில் வைத்திருந்த சுத்தியலால் பைக்கை உடைத்து சேதப்படுத்தியதுடன், அவா்கள் இருவருக்கும் கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து, சுமனை கைது செய்தனா்.