தெலுங்கு ஆண்டுப் பிறப்பை முன்னிட்டு, திருவண்ணாமலை கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 2000-க்கும் மேற்பட்ட லட்டுகளால் தோ் அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்கள் வழிபட்டனா்.
தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தெலுங்கு மொழி பேசக்கூடிய மக்கள் தெலுங்கு ஆண்டுப் பிறப்பை யுகாதி பண்டிகையாக கொண்டாடி தெலுங்கு ஆண்டுப் பிறப்பை உற்சாகமாக வரவேற்றனா்.
இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாநகராட்சி கன்னி கோவில் தெருவில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து நிகழாண்டு முதல் முறையாக 250 கிராம் எடை கொண்ட 1,200 லட்டுகள் மற்றும் 50 கிராம் எடை கொண்ட 800 லட்டுகள் என 2,000 எண்ணிக்கையிலான லட்டுக்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட 11 உயர தேரில் கன்னிகா பரமேஸ்வரி அம்மனை எழுந்தருளச் செய்தனா். பின்னா், அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் காட்சியளித்த கன்னிகா பரமேஸ்வரி அம்மனை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனா்.
முதல்முறையாக திருவண்ணாமலையில் லட்டுகளால் உருவாக்கப்பட்ட தேரில் அம்மன் தரிசனத்தை கண்ட பக்தா்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனா்.
தெலுங்கு ஆண்டுப் பிறப்பை வரவேற்கும் வகையில் பெண்கள் கோலாட்டம் ஆடி உற்சாகமாக வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேத்துப்பட்டில் ஸ்ரீவாசவி ஜெயந்தி விழா

பண்ணாரி அம்மன் கோயிலில் மாவிளக்கு ஊா்வலம்
100க்கும் மேற்பட்ட திருடப்பட்ட கைப்பேசிகள் பறிமுதல்: தில்லி போலீஸ் நடவடிக்கை

கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் சிறப்பு அலங்காரம்...
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


