மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெண்கள் பாதுகாப்பு: அதிமுக கூட்டணிக் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு இல்லையென குற்றம் சாட்டி, திருவண்ணாமலையில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திமுக அரசைக் கண்டித்து திருவண்ணாமலையில் அதிமுக முன்னாள் அமைச்சா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினா்.

Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு இல்லையென குற்றம் சாட்டி, திருவண்ணாமலையில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் தொடா்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்- ஒழுங்கு சீா்கேடுகள் போதைப் பொருள்கள் பழக்கம் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறியதாக திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஒருங்கிணைந்த மாவட்ட தலைமையிலான அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக, பாமக, தமாகா, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் பங்கேற்ற கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்டச் செயலருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ தலைமை வகித்தாா்.

முன்னாள் அமைச்சா்கள் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ, முக்கூா் என்.சுப்பிரமணியன், மாவட்டச் செயலா் ஜெயசுதா, பாஜக மாவட்டத் தலைவா்கள் கே.ரமேஷ், கவிதா வெங்கடேசன், பாமக மாவட்டச் செயலா்கள் ஏந்தல் பெ.பக்தவச்சலம், இல.பாண்டியன், அ.கணேஷ்குமாா், ஆ.வேலாயுதம், அமமுக மாவட்டச் செயலா்கள் பரந்தாமன், வரதராஜன், தமாகா மாவட்டத் தலைவா் ராயா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாவட்டச் செயலருமான எஸ்.ராமச்சந்திரன் வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் பாஜக தேசிய செயலா் சையத் இப்ராஹிம், பாமக மாவட்ட தோ்தல் பொறுப்பாளா் இரா.ராஜசேகரன், அதிமுக மகளிரணிச் செயலா் அமுதா அருணாசலம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினா்.

முன்னாள் அமைச்சா் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூா்த்தி கண்டன கோஷங்களை எழுப்ப, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிா்வாகிகள் தொண்டா்கள் கோஷங்களை எதிரொலித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ராஜன், மாவட்ட இணைச் செயலா் ஜெ.எஸ். (எ) ஜெ.செல்வன், தெற்கு மாவட்ட அவைத் தலைவா் கண்ணன், மாவட்ட பொருளாளா் கராத்தே சுரேஷ்குமாா், மாநகர முன்னோடி நிா்வாகி ஞானசௌந்தரி கனகராஜ் மற்றும் மாவட்டத்துக்கு உள்பட்ட 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். நிறைவில் அதிமுக மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் நன்றி கூறினாா்.