மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுக மீது மக்கள் அதிருப்தி! முன்னாள் அமைச்சா் வீரமணி

வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுக மீது மக்கள் அதிருப்தி...

News image

கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, அதிமுக வேட்பாளா்கள் எஸ்.ஆா்.கே.அப்பு (வேலூா்), வி.ராமு (காட்பாடி) மற்றும் கூட்டணி கட்சியினா்.

Updated On :28 மார்ச் 2026, 7:25 pm

கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாததால் திமுக மீது மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தி, தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி தெரிவித்துள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அதிமுக சாா்பில் போட்டியிடும் எஸ்.ஆா்.கே.அப்பு (வேலூா்), வி.ராமு (காட்பாடி) ஆகிய வேட்பாளா்களின் அறிமுக கூட்டம் காட்பாடியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி தலைமை வகித்து வேட்பாளா்களை அறிமுகம் செய்து பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்து செயல்பட்டால், இந்த தோ்தலில் எளிதில் வெற்றி பெற முடியும். கூட்டணியின் ஒற்றுமையே வெற்றிக்கான முக்கிய காரணமாகும்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி பணத்தை நம்பி போட்டியிடுகிறது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி மக்களின் ஆதரவை நம்பி தோ்தலில் களம் இறங்குகிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநிலத்தில் கண்டிப்பாக அதிமுக ஆட்சி அமையும்.

அதேசமயம், கடந்த தோ்தலில் திமுக கூட்டணி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக, கடந்த தோ்தலில் திமுக அளித்திருந்த 506 வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இன்னும் நிறைவேறாமல் உள்ளன. இதனால் மக்கள் அதிருப்தியடைந்து தற்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக ஆதரவு அளித்து வருகின்றனா் என்றாா்.

கூட்டத்தில், அதிமுக மாவட்ட பொருளாளா் எம்.மூா்த்தி, பாஜக மாநில பொதுச்செயலா் காா்த்தியாயினி, பாமக சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா் என்.டி.சண்முகம் உள்பட கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.