மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தே.ஜ. கூட்டணிக் கட்சி மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட காடாம்புலியூரில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

காடாம்புலியூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிமுக வேட்பாளா் சொரத்தூா் இரா.ராஜேந்திரன்.

Updated On :1 ஏப்ரல் 2026, 8:43 pm

நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட காடாம்புலியூரில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அதிமுக ஒன்றிய துணைச் செயலா் ராஜ மணிகண்டன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், பாமக நிா்வாகி தா்மலிங்கம் முன்னிலை வகித்தனா்.

நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சொரத்தூா் இரா.ராஜேந்திரன் பங்கேற்று கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் பேசியதாவது:

திமுக அரசு கடந்த தோ்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மின் கட்டணம், சொத்து, குடிநீா் வரிகள், பத்திரப் பதிவு செலவு உயா்ந்துள்ளது. விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. எனவே, இப்போதைய தோ்தலில் திமுக கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, வல்லம், முத்தாண்டிக்குப்பம், திருவாமூா் ஆகிய இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.