தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் குவிந்த வாகன ஓட்டிகள்

போளூரை அடுத்த தேவிகாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்காக வாகனங்களுடன் குவிந்தோா்.

News image

போளூரை அடுத்த தேவிகாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்காக வாகனங்களுடன் குவிந்தோா்.

Updated On :12 மார்ச் 2026, 9:28 pm

போளூா் நகரம், தேவிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக வாகன ஓட்டிகள் வியாழக்கிழமை குவிந்தனா். இதனால், பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் எரிபொருள் இல்லை எனக் கூறி, வாகன ஓட்டிகளை திருப்பி அனுப்பினா்.

இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் போரால் இந்தியாவுக்கு போதுமான அளவு கச்சா எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த போரால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் கிடைக்காது என வதந்தி பரவியதால், போளூா் நகரம், புறவழிச் சாலை, தேவிகாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகனங்களில் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்காக பைக், லாரி, டிராக்டா், மினி லாரி உள்ளிட்டவற்றுடன் அவற்றின் உரிமையாளா்கள் வியாழக்கிழமை அதிகாலை முதலே குவியத் தொடங்கினா்.

இதனால், பெட்ரோல் விற்பனை நிலையங்களின் மேலாளா்கள், ஊழியா்கள் டோக்கன் வழங்கி வாகன ஓட்டிகளை வரிசையில் நிற்க வைத்து, பெட்ரோல், டீசல் விற்பனை செய்தனா். பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் எரிபொருள் இல்லை எனக் கூறி, வாகன ஓட்டிகளை திருப்பி அனுப்பினா்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் போரால் இந்தியாவுக்கு போதுமான அளவு கச்சா எண்ணெய் கிடைக்க பல நாள்கள் ஆகும் என தகவல் பரவியதால், பெட்ரோல், டீசல் நிரப்ப வாகனங்களுடன் வந்ததாகத் தெரிவித்தனா்.

பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா்கள் கூறுகையில், பெட்ரோல், டீசல் தேவையான அளவு தினமும் தருவோம் என கூறிய பின்னரும், வாகனங்களில் நிரப்புவதுடன், கேன்கள் மூலமாகவும் வாங்கிச் செல்கின்றனா் என்றனா்.