தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தஞ்சாவூரில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பெட்ரோல் பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகள்!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக, தஞ்சாவூரில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் அதிகளவு கூடியது குறித்து...

News image

தஞ்சாவூரில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் அதிகளவு கூடிய வாகன ஓட்டிகள். - petrol stations

Updated On :12 மார்ச் 2026, 2:58 am

தஞ்சாவூர்: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக, தஞ்சாவூரில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் அதிகளவு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இஸ்ரேல்-அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடியாகவும், ஈரான் தலைமை மதகுரு கமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையிலும், உலகில் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அதிகம் பயன்படுத்தப்படும் கடல் பகுதிகளில் ஒன்றான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் சனிக்கிழமை மூடியது. இந்தியா தனக்குத் தேவையான 88 சதவீத கச்சா எண்ணெய், 60 சதவீத இயற்கை எரிவாயுவை சவூதி அரேபியா, கத்தாா், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் இந்த நீரிணை வழியாகவே இறக்குமதி செய்து வருகிறது.

இந்த நீரிணையை ஈரான் மூடிவிட்ட போதிலும், இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்-டீசல், எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது. ஏனெனில் இந்தியாவிடம் ஏற்கெனேவே 10 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல் , டீசல், எரிவாயு இருப்பு உள்ளது. இதேபோல் அவசர காலத்துக்கு பயன்படுத்துவதற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவை மேலும் 5 முதல் 7 நாள்கள் வரை பயன்படுத்த முடியும்.

இதேபோல், ஹோா்முஸ் நீரிணை ஈரானால் மூடப்பட்டிருப்பது அதிக காலம் நீடிக்காது எனக் கூறப்படுகிறது. அப்படி நீடிக்கும்பட்சத்தில், வளைகுடா நாடுகளுக்கு மாற்றாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா மீண்டும் இறக்குமதி செய்யும். வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல் இந்தியாவுக்கு ஐந்து நாள்களில் வந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போா் காரணமாக வணிக ரீதியான சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், எரிவாயு தட்டுப்பாடு போல பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் நாளை முதல் பெட்ரோல் விலை உயரப்போவதாக புதன்கிழமை இரவு சமூக ஊடகங்களில் செய்திகள் பரவியது.

இதையடுத்து தஞ்சாவூர் பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகள் அதிகளவில் குவிந்து, தங்களது வாகனங்களுக்கு தேவையான எரிபொருள்களை நீண்ட நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனா்.

இதனால் தஞ்சாவூர் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் கூட்ட நெரிசலுடன் பரபரப்பாக காணப்பட்டது.

Summary

Petrol and diesel shortage in Thanjavur: Motorists flock to petrol pumps!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.