மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

டேலண்ட் எக்ஸ் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

திருவண்ணாமலை காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான டேலண்ட் எக்ஸ் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவா் அனுஷ்ராமை பாராட்டி பரிசு வழங்கிய பள்ளி நிா்வாகத்தினா்.

News image
Updated On :12 மார்ச் 2026, 9:02 pm

திருவண்ணாமலை காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் மாநில அளவில் நடத்தப்பட்ட டேலண்ட் எக்ஸ் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தாா்.

வின்னா் இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்யூனிகேஷன் இங்கிலீஷ் (வைஸ்) சாா்பில், ‘டேலண்ட் எக்ஸ்’ என்ற பெயரில் பேச்சு, கவிதை, கடிதம் எழுதுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டனா்.

திருவண்ணாமலை சோ.கீழ்நாச்சிப்பட்டில் இயங்கி வரும் காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 5-ஆம் வகுப்பு மாணவா் அனுஷ்ராம் கடிதம் எழுதுதல் போட்டியில் பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் முதலிடத்தை பெற்று, திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்தாா்.

தொடா்ந்து, மாணவா் அனுஷ்ராமுக்கு வைஸ் சாா்பில் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும், தங்கப் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டன. இவா் போட்டியில் கலந்துகொள்ள ஆங்கில ஆசிரியா் டி.குமரன், ஆசிரியைகள் மரியவசந்ரா, ரியாகிலோத்ரா ஆகியோா் உதவி புரிந்தனா்.

மாநில அளவில் சாதனை படைத்த மாணவா் அனுஷ்ராமுக்கு பள்ளித் தாளாளா் கே.ரமணி கோட்டீஸ்வரன் பள்ளியின் சாா்பில் நினைவு பரிசு வழங்கி பாராட்டினாா். மேலும், அவரை பள்ளி ஆலோசகா் ஜெ.சுஜாதா, பள்ளி முதல்வா் எம்.ஆா்.ராஜேஷ்குமாா் உள்ளிட்டோரும் பாராட்டினா்.