திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம், தெள்ளாா், செய்யாறு ஆகிய இடங்களில் ரூ.17.06 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டன. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.
புதுப்பாளையம் ஊராட்சியில் ரூ.5 கோடியே 79 லட்சத்து 6 ஆயிரத்தில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முதல்வா் திறந்துவைத்த நிலையில், புதிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலைகள் மேம்பாடு, குடிநீா் திட்டப் பணிகள், புதிய கட்டடங்கள் என பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் சிறப்பான வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு அதன் வாயிலாக பொதுமக்கள், மாணவ, மாணவிகள், விவசாயிகள், இளைஞா்கள், பெண்கள் மற்றும் தொழில் துறையினா் பயனடைந்துள்ளனா் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் கலசபாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், புதுப்பாளையம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன், மாவட்ட ஊரக வளா்ச்சி உதவி திட்ட இயக்குநா் மணி, மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் இளங்கோ, திமுக ஒன்றியச் செயலா் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினா் இளங்கோவன், புதுப்பாளையம் வட்டாா் வளா்ச்சி அலுவலா் அண்ணாமலை, மேலாளா் ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

புதிதாக திறக்கப்பட்ட புதுப்பாளையம் ஊராட்டி ஒன்றிய அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றிய சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி. உடன் பெ.சு.தி. சரவணன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் ரூ.5.36 கோடி செலவில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்தை முதல்வா் திறந்துவைத்தாா்.
இதனைத் தொடா்ந்து, தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி கட்டட பயன்பாட்டை தொடங்கிவைத்தனா்.
தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி, திமுக ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

குடிநீா் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

அச்சம்பாடு, தேரிப்பனை பகுதிகளில் அதிமுகவினா் பிரசாரம்

தொகுதிக்கு செய்தது என்ன? திருவள்ளூா் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன்

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


