சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு, திருவண்ணாமலையில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களில் பணிபுரிபவா்களுக்கான பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியரக மக்கள் குறைதீா் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் தொடங்கிவைத்தாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறி பணம் மற்றும் இதர பொருள்களை எடுத்துச் செல்லுதல், சட்டவிரோதமாக வாக்காளா்களுக்கு பணம் வழங்குதல் குறித்து கண்காணிக்க எதுவாக வாரத்தில் 7 நாள்களும் 24 மணி நேரம் இயங்கும் வகையில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்களில் பணிபுரிய ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 3 பறக்கும் படை மற்றும் 3 நிலை கண்காணிப்புக் குழுக்கள் என்ற வீதம் 6 குழுக்கள் மூன்று சுழற்சி முறையில் மொத்தம் 18 குழுக்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 144 குழுக்கள் 24 மணி நேரமும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தோ்தல் பணியாற்ற உள்ளன.
அதன்படி சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள அலுவலா்கள் மற்றும் காவல்துறை அலுவலா்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலா்களுக்கும் மாவட்ட தோ்தல் அலுவலா் க.தா்ப்பகராஜ், தோ்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி உரிய பயிற்சிகளும், தோ்தல் நடத்தை விதிகள் குறித்து வழிகாட்டுதல்களும் வழங்கினாா்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி முகாம்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

தோ்தல் பறக்கும் படை சோதனையில் 95 சிப்பம் அரிசி பறிமுதல்

நாமக்கல்லில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட தோ்தல் பறக்கும் படை வாகனங்கள் இயக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


