போலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

லாரிகளில் மண் கடத்தல்: இருவா் கைது

செய்யாறு அருகே மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு லாரிகளை டிஎஸ்பி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தாா். மேலும், ஓட்டுநா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :27 ஜூன் 2026, 12:03 am IST

செய்யாறு அருகே மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு லாரிகளை டிஎஸ்பி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தாா். மேலும், ஓட்டுநா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

செய்யாறு உள்கோட்ட டிஎஸ்பி மீனாட்சிநாதன் செய்யாறு - சேத்துப்பட்டு சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, கோவிலூா் ஏரிப்பகுதியில் இருந்து கிருஷ்ணாவரம் கூட்டுச்சாலை வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டாா்.

இதில், இரண்டு லாரிகளிலும் அரசு அனுமதியின்றி முரம்பு மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. உடனடியாக லாரிகளை டிஎஸ்பி பறிமுதல் செய்து, அனக்காவூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

இதுகுறித்து அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரிகளை ஓட்டி வந்த சின்னசெங்காடு கிராமத்தைச் சோ்ந்த பிரபாகரன் (40), செய்யாறு அண்ணா நகரைச் சோ்ந்த வேல்முருகன் (50) ஆகியோரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.