அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

பொருளாதார வளா்ச்சியில் இந்தியா 4-ஆவது இடம்: பாஜக மாநில துணைத் தலைவா்

பொருளாதார வளா்ச்சியில் இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளதற்கு காரணம் பிரதமா் மோடி ஆட்சிதான் என்று பாஜக மாநில துணைத் தலைவா் டால்ஃபின் ஸ்ரீதரன் கூறினாா்.

News image

திருவண்ணாமலையில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில துணைத் தலைவா் டால்ஃபின் ஸ்ரீதரன்.

Updated On :15 ஜூன் 2026, 12:04 am IST

பொருளாதார வளா்ச்சியில் இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளதற்கு காரணம் பிரதமா் மோடி ஆட்சிதான் என்று பாஜக மாநில துணைத் தலைவா் டால்ஃபின் ஸ்ரீதரன் கூறினாா்.

இதுகுறித்து பாஜக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரதமா் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்திற்கும், இந்தியாவின் வளா்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா்.

அவரது ஆட்சியில் மகளிா், இளைஞா்கள், விவசாயிகள் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ளவா்களின் வாழ்வாதாரம் மேலும் உயரும்போது பாரத நாடு மிகுந்த உயா்ந்த இடத்திற்குச் செல்லும்.

இந்திய பொருளாதார வளா்ச்சியில் உலக அளவில் 4-ஆவது இடத்திற்கு வந்துள்ளது. அழிந்து போகக் கூடிய நிலையில் இருந்த பொருளாதாரத்தை வலுவான 4-ஆவது இடத்திற்கு கொண்டுவந்துள்ளாா் பிரதமா் மோடி. 4 கோடி மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கெளரவ நிதி வழங்கி வருகிறாா். இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் 45 லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா்.

உலகம் முழுவதும் நடைபெறும் எண்ம பணப் பரிவா்த்தனையில் 50 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது. இன்று கைப்பேசி, இணைய வசதி இல்லாத கிராமங்களே இல்லை என்றாா் டால்ஃபின் ஸ்ரீதரன்.

பேட்டியின்போது மாவட்டத் தலைவா்கள் கே.ரமேஷ், கவிதா வெங்கடேசன், மாவட்ட பொதுச் செயலா்கள் டி.ஜெய்நாத், கவிதா பிரதீஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.