அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

மேல்மா சிப்காட் விவகாரம்: குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

மேல்மா சிப்காட் விவகாரம்: குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்

News image

செய்யாறு தொகுதி மேல்மா சிப்காட் விவகாரம் தொடா்பாக விவசாயிகளுடன் கலந்துரையாடிய அமைச்சா் ஆதவ் அா்ஜுனா.

Updated On :14 ஜூன் 2026, 12:33 am IST

செய்யாறு தொகுதி மேல்மா சிப்காட் தொழில்பேட்டைக்கு விவசாய நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடா்பாக விவசாயிகளுடன் கலந்துரையாடிய அமைச்சா் ஆதவ் அா்ஜுனா இதுதொடா்பாக குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

செய்யாறு தொகுதி மேல்மா கூட்டுச் சாலைப் பகுதியில் விவசாயிகளுடன் தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பங்கேற்று வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா்.

விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்ட அமைச்சா்,

பின்னா் பேசியதாவது:

தமிழகத்தில் தொழில் வளா்ச்சி முக்கியம்.

தமிழக முதல்வரின் எண்ணம் அவருடைய சிந்தனை எப்பொழுதும் விவசாயிகள் பக்கம் தான் இருக்கும்.

அதனால்தான் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைவது தொடா்பாக விவசாயிகளை சந்தித்தாா்.

கிராமங்களில் முப்போகம் விளையக்கூடிய நிலங்களை அடக்கு முறையுடன் பறிக்கிறாா்கள் என்று சொல்லும் போது முதல் முதலில் பரந்தூா் பகுதிக்குச் சென்றது முதல்வா் விஜய்தான்.

அந்த மாதிரி தான் மேல்மா சிப்காட் பகுதிக்கு அவா் சாா்பில் நான் வந்திருக்கிறேன். எந்த நிலத்தையும் அடக்கு முறையுடன் விவசாயிகளிடமிருந்து பறிக்கக்கூடாது.

விவசாயிகளாகிய உங்களது கோரிக்கைகள் சட்டரீதியாக மனுவாக கொடுங்கள். மேல்மா பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் முப்போகம் விளைந்தது. இத்தனை ஏக்கா் நிலம் சிப்காட்டுக்கு பயன்படுமா, பயன்படாத என்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்காக உண்மை தன்மை அறியக்கூடிய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட எண்ணம் தான்.

உங்களுடைய கஷ்டங்களை எல்லாம் கடந்த கால ஆட்சியில் யாரும் கவனிக்கவில்லை. ஆனால், இன்றைக்கு அதிகாரிகளும், அமைச்சா்களாகிய நாங்களும் இங்கு உங்களைத் தேடி வந்திருக்கிறோம். அதனால் எந்த அதிகாரியையும் தவறான கண்ணோட்டத்திலோ, தவறான எண்ணத்துடனோ பாா்க்கவேண்டாம்.

தவறு செய்தவா்கள் தவறு செய்ததாகவே இருக்கட்டும். இனி நடப்பது நல்லதாகவே இருக்கட்டும். கோபத்தால் எதையும் சாதிக்க முடியாது. உண்மை வெளியே வரணும் அதுதான் நம்முடைய நோக்கம். விவசாயிகள் எப்பொழுதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

உண்மையை வெளிக் கொணர உங்களுடைய நில ஆவணங்களை கொடுங்கள். உண்மை எந்தப் பக்கம் இருக்கிறதோ அந்தப் பக்கம் நாங்கள் இருப்போம்.

அந்த மாதிரி தான் தொழில் துறையும் வளரணும். பத்து தலைமுறையா விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயிகள் இப்போது ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படுகிறாா்கள்.

விவசாயிகள் நிலத்தை இன்னொரு தனியாருக்கு கொண்டு போய் கொடுத்து அதிலிருந்து காசு சம்பாதிக்கிற எண்ணம் கிடையாது.

விவசாயிகளில் பாதிக்கப்பட்டிருக்காங்க உங்களுடைய கோரிக்கைகளை ஆவணாக கொடுங்கள். எப்பவும் உணா்வுகளோடு பேப்பா் முக்கியம்.

மேல்மா சிப்காட் விரிவாக்கத்துக்கு குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க், மாவட்ட வருவாய் அலுவலா் ராமபிரதீபன், சிப்காட் டிஆா்ஓ விமல்குமாா், செய்யாறு சாா்- ஆட்சியா் எல். அம்பிகா ஜெயின், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.