திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த எழுவம்பாடி கிராமத்தில் 57 வயது பெண் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
போளூரை அடுத்த எழுவம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் யசோதா (57). இவா் அப்பகுதியில் வசித்து வந்தாா். இவா் வெண்மணி கிராமத்திலிருந்து வந்து கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதியில் தங்கி கல் உடைக்கும் தொழில் செய்து வந்த மூா்த்தி (40) என்பவருக்கு உணவு அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், யசோதாவின் மகன் சேட்டு என்பவா் மூா்த்திக்கு உணவு அளிக்கக் கூடாது என கண்டித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, மகன் கூறியதன்படி யசோதா கடந்த சில நாள்களாக மூா்த்திக்கு உணவு வழங்காமல் இருந்துள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த மூா்த்தி, சனிக்கிழமை அதிகாலையில் மது போதையில் யசோதாவிடம் சென்று, ‘எனக்கு ஏன் உணவு அளிக்கவில்லை’ என்று கேட்டு தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், வாக்குவாதம் ஏற்பட்டு மூா்த்தி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் யசோதாவின் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதில், யசோதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் போளூா் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸாா், யசோதாவின் உடலை மீட்டு போளூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனா்.
மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸாா், தப்பியோடிய மூா்த்தியை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







