தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

தில்லி: வீட்டுப் பணிப்பெண்ணை குத்திக் கொலை செய்த மருத்துவா் கைது

தெற்கு தில்லியின் மவுன்ட் கைலாஷ் பகுதியில் 45 வயது பணிப்பெண் கொடூரமாகத் தாக்கப்பட்டு, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவா் பணியாற்றிய வீட்டின் உரிமையாளரும் மருத்துவருமான மணீஷ் குப்தா இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூன் 2026, 4:19 am IST

தெற்கு தில்லியின் மவுன்ட் கைலாஷ் பகுதியில் 45 வயது பணிப்பெண் கொடூரமாகத் தாக்கப்பட்டு, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவா் பணியாற்றிய வீட்டின் உரிமையாளரும் மருத்துவருமான மணீஷ் குப்தா இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

முதல்கட்ட விசாரணையில், தான் உயிரிழந்த பெண்ணை கிரிக்கெட் மட்டையால் தாக்கி, கத்தியால் குத்தியதாக அவா் தெரிவித்தாா். சமீபத்தில் இந்த பகுதியில் ஐஆா்எஸ் அதிகாரியின் மகள் வீட்டுப் பணியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த சம்பவம் அப்பகுதி குடியிருப்பாளா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல் துறை துணை ஆணையா் (தென்கிழக்கு) ஹேமந்த் திவாரி கூறியதாவது: கட்டடத்தின் மாடியில் ரத்த வெள்ளத்தில் பெண் சடலமாக கிடப்பதாக பிற்பகல் 11:30 மணியளவில் அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினா், உடனடியாக குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவரை கைது செய்தனா். கொலைக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

உயிரிழந்த பெண்ணின் உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கிரிகெட் மட்டை மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.