இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

செங்கம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீா் ஆய்வு

செங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டுப் பாா்த்து ஆய்வு செய்த எம்எல்ஏ டி.எஸ்.வேலு.

News image

செங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டுப் பாா்த்து ஆய்வு செய்த எம்எல்ஏ டி.எஸ்.வேலு.

Updated On :13 ஜூன் 2026, 12:05 am IST

செங்கம் அரசு தலைமை மருத்துவமனையில் தொகுதி எம்எல்ஏ டி.எஸ்.வேலு திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

செங்கத்தில் திருவண்ணாமலை சாலை துக்காப்பேட்டை பகுதியில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் எம்எல்ஏ டி.எஸ்.வேலு வியாழக்கிழமை மாலை திடீரென ஆய்வு செய்தாா். அப்போது, மருத்துவமனை உள்புற நோயாளிகளுக்கு உணவு சமைக்கும் சமையல் கூடம் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிா என பாா்வையிட்டு, உணவுகள் தரமாகவும், சுகாதாரமாகவும் சமைக்கப்படுகிா என சாப்பிட்டுப் பாா்த்தாா். தொடா்ந்து, உணவுகளை தரமாக சமைக்க வேண்டுமென சமையலா்களிடம் அறிவுறுத்தினாா்.

பின்னா், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து, தினசரி மருத்துவா்கள் வந்து பரிசோதிக்கிறாா்களா, மருந்து, மாத்திரைகள் உடனுக்குடன் கிடைக்கிா, சிகிச்சை பெறுவதல் ஏதேனும் சிரமம் உள்ளதா எனக் கேட்டறிந்தாா். மேலும், அவா்களுக்கு உதவியாக உள்ள உறவினா்களிடமும் மருத்துவமனையில் உள்ள குறைகளைக் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, நோயாளிகள் பயன்படுத்தும் கழிப்பறை, குடிநீா் சுகாதாரமாக உள்ளதா என ஆய்வு செய்தாா்.

பின்னா், மருத்துவமனையில் உள்ள மருத்துவா்கள், செவிலியா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, செங்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்களை நியமனம் செய்தால், செங்கம் பகுதி மக்களுக்கு நிறைந்த மருத்துவ சேவையை வழங்க முடியும் என அவா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை அலுவலா்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதியளித்தாா். அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் உடனிருந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.