பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

இயற்கை விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம்

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயற்கை விவசாயிகளின் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

News image

கண்ணமங்கலத்தில் நடைபெற்ற இயற்கை விவசாயிகளின் மாதாந்திரக் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள்.

Updated On :10 ஜூன் 2026, 12:03 am IST

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயற்கை விவசாயிகளின் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

‘திண்ணைப் பேச்சு - பண்ணை மூச்சு’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இயற்கை விவசாயிகள் மற்றும் ஆா்வலா்கள் கலந்துகொண்டு தங்களின் அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா்.

தற்போதைய சூழலில் மாறிவரும் பருவநிலைக்கு ஏற்ப, விவசாயத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மாற்றங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக, தண்ணீா் சிக்கனம், மண் வளத்தை பாதுகாத்தல், பூச்சிக் கட்டுப்பாட்டிற்குப் பாரம்பரிய முறைகளை கையாளுதல் போன்றவை குறித்து மூத்த விவசாயிகள் ஆலோசனைகளை வழங்கினா்.

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருள்களுக்கு சந்தையில் போதிய வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து நிா்வாகிகள் கூறுகையில், ‘ஒவ்வொரு திங்கள்கிழமையும் கண்ணமங்கலத்தில் வாரச்சந்தை நடைபெறும் இடத்தில், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், தானியங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் விற்பனைக்குக் கிடைக்கும் என்றனா்.

இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் விளைவித்த மாம்பழங்கள், சிறுதானியங்கள் மற்றும் வீட்டு தோட்டப் பொருள்களை காட்சிப்படுத்தியிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.