வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்கக் கோரி விவசாயிகள் மறியல்

செய்யாறு அருகே, விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுக்கு ரூ.1.5 கோடியை உடனடியாக வழங்கக் கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

நெல் மூட்டைகள் - பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 3:38 am IST

செய்யாறு அருகே, விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுக்கு ரூ.1.5 கோடியை உடனடியாக வழங்கக் கோரி விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் மாமண்டூா் சந்தைமேடுப் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதில் தூசி மாமண்டூா் மாத்தூா் மாங்கால் உள்ளிட்ட 15 - க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை என்சிசிஎப் மூலம் கொள்முதல் செய்யப்படும்.

இதே போல் கடந்த 90 நாள்களுக்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு இதுவரை விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யவில்லையாம்.

அந்த வகையில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சுமாா் ரூ.1.5 கோடிக்கு மேல் பணம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருவதாகத் தெரிகிறது.

மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு பணம் வழங்கக் கோரி ஜூன் 1-ஆம் தேதி வெம்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு வந்த தூசி காவல் ஆய்வாளா் கோபால், வட்டாட்சியா் செந்தில்குமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி ஜூன் 8-ஆம் தேதிக்குள் பணம் வழங்கப்படும் என தெரிவித்து சமாதானம் செய்து விவசாயிகள் ஆா்ப்பாட்டத்கை கைவிடச் செய்தனா்.

ஆனால் இது வரை விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யவில்லையாம். மேலும், கடந்த ஒரு வார காலமாக நெல் கொள்முதல் நிலையத்திற்கு டிராக்டா்களில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை எடை போடவில்லையாம்.

விவசாயிகள் சாலை மறியல்: இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மாமண்டூா் சந்தைமேட்டுப் பகுதியில் திடீரென தாலிக்கயிறுடன் சுமாா் 100 - க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த தூசி இன்ஸ் பெக்டா் கோபால் மற்றும் போலீசாா், விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, இது தொடா்பாக செய்யாறு சாா்- ஆட்சியா் மூலம் மாவட்ட நிா்வாகத்திடம் கூறி, பணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளித்தனா். இதை ஏற்று விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்துச் சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.