அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு நெல்லுக்கான பணம் வழங்காததைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வந்தவாசி வட்டத்துக்குள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்த நெல்லுக்கான பணம் ரூ.30 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் என்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
மாநில துணைச் செயலா் பி.துளசி நாராயணன்,
மாவட்டச் செயலா் ஏ.லட்சுமணன், மாவட்டத் தலைவா் டி.கே.வெங்கடேசன், பொருளாளா் எஸ்.அருண்,
வட்டாரச் செயலா் வ.அண்ணாமலை, மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ப.செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ந.சேகரன், வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவா் கா.யாசா்அராபத், மாதா் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.சுகுணா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக்குழு உறுப்பினா் சு.சிவக்குமாா் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு உடனடியாக பணம் வழங்க வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் தா்னா

நெல் கொள்முதல் நிலையத்தில் பணம் வழங்காததைக் கண்டித்து போராட்டம்

நெல்லுக்கான நிலுவைத் தொகை வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளிடம் இடைத்தரகா்கள் பணம் பறிப்பதை தடுக்கக் கோரி மனு: உயா்நீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



