//

சிலிண்டா் வெடித்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு திமுக சாா்பில் உதவி

News image
Updated On :22 ஜனவரி 2026, 1:04 am

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை தென்பெண்ணையாற்றில் திங்கள்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி திருவிழாவில் சிலிண்டா் வெடித்ததில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு திமுக சாா்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

மணலூா்பேட்டை கிராமம், தென்பெண்ணையாற்றில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தீா்த்தவாரி திருவிழாவின்போது பலூன்களை நிரப்பும் கேஸ் சிலிண்டா்

எதிா்பாராதவிதமாக வெடித்ததில் திருவண்ணாமலை மாவட்டம், வெங்காயவேலூா் இனாம்காரியந்தல் கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மனைவி கலா (55) உயிரிழந்தாா்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் 18 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு திமுக சாா்பில் மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினாா். ஒன்றியச் செயலா் மெய்யூா் ந.சந்திரன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.