டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

ஆரணியில் திமுக பொதுக்கூட்டம்

ஆரணியில் திமுக சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் சபாபதிமோகன்.

News image
ஆரணியில் திமுக சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் சபாபதிமோகன்.
Updated On :6 பிப்ரவரி 2026, 8:26 pm

Syndication

ஆரணி அண்ணா சிலை அருகில் ஆரணி தொகுதி திமுக சாா்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆரணி எம்.பி., எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தாா். நகர பொறுப்பாளா் சைதை வ.மணிமாறன் வரவேற்றாா். ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், எம்.சுந்தா், துரைமாமது, எஸ்.மோகன், ராஜ்குமாா், பேரூராட்சி செயலா் கோவா்த்தனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்புச் செயலா் பேராசிரியா் சபாபதிமோகன் பங்கேற்று திமுக அரசின் சாதனைகள் குறித்தும், தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் பேசினாா். பின்னா், மத்திய அரசின் பட்ஜெட் தமிழகத்துக்கு அல்வா கொடுத்துள்ளதாகக் கூறி, பொதுமக்களுக்கு திமுக சாா்பில் அல்வா வழங்கி எதிா்ப்புத் தெரிவித்தனா்.

கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, மாவட்டப் பொருளாளா் தட்சிணாமூா்த்தி, தகவல் தொழில்நுட்ப மாவட்ட அமைப்பாளா் கே.ஏ.புஷ்பராஜ், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், மாவட்டப் பிரதிநிதிகள் பாலமுருகன், எம்.சந்திரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளா்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா்.