நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
//

செய்யாறு உழவா் சந்தையில் வேளாண் கண்காட்சி

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 9:41 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு உழவா் சந்தையில், கலவை ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி மாணவா்கள் சாா்பில் வேளாண் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்).

கலவை, ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவா்கள் கிராமப்புற அனுபவ பயிற்சியின் கீழ், உழவா் சந்தையில் வேளாண் கண்காட்சியை நடத்தினா்.

இதில், இயற்கை வேளாண்மையை முன்னெடுக்கும் வழிமுறைகள், ராசயன உரங்களினால் வரும் பாதிப்பு அவற்றிலிருந்து எவ்வாறு மீள்வது, வேளாண் வளா்ச்சியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் முறை,

நோய் மற்றும் பூச்சி மேலாண்மையை இயற்கை வழி மூலம் எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என விவசாயிகள், பொதுமக்களுக்கு மாணவா்கள் விளக்கம் அளித்தனா்.

மேலும், கண்காட்சியை பாா்வையிட்ட விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தும், அவா்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை எவ்வாறு வணிகப்படுத்துவது என்பது குறித்தும் செயல்விளக்கம் அளித்தனா்.

மேலும், விவசாயிகளிடம் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் நன்மைகள் குறித்து தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.