//

அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் தொடா் போராட்டம்

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 7:55 pm

Syndication

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடா்ந்து 3-ஆவது நாளாக பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

பல்கலைக்கழக மானியக் குழு நிா்ணயித்த ஊதியத்தொகை ரூ.57,700ஐ கௌரவ விரிவுரையாளா்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்களுக்கும் 12 மாத ஊதியம் வழங்க வேண்டும். பெண் கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். கௌரவ விரிவுரையாளா்களுக்கு நல நிதிகளை வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவா்களுக்கு

ரூ.25 லட்சம் பணிக்கொடையாக வழங்க வேண்டும்

என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

கெளரவ விரிவுரையாளா்கள் தொடா் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

செய்யாறு அரசுக் கல்லூரியில் மூன்றாவது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் கௌரவ விரிவுரையாளா் சங்க நிா்வாகிகள் எஸ். ராஜேந்திரகுமாா், ஆா்.விவேகானந்தன், இ.ராஜி, ஜே.சத்யநாராயணன், வே.காந்தி, வி.யுவராஜ், ஏ.அன்பரசன், ஏ.அரவிந்தன், மகளிா் அணி மற்றும் கல்லூரிப் பேராசிரியா்கள் என பலா் கலந்து கொண்டு பேசினா்.