தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

செங்கம் இதயா கல்லூரி மாணவிகள் 208 பேருக்கு பணி நியமன ஆணை

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் உண்ணாமலைப்பாளையத்தில் உள்ள இதயா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் இருதியாண்டு படித்த மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் இதயா மகளிா் கல்லூரியில் 208 மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய கல்லூரிச் செயலா் சம்பூா்ணமேரி.

Updated On :10 ஏப்ரல் 2026, 8:03 pm

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் உண்ணாமலைப்பாளையத்தில் உள்ள இதயா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் இருதியாண்டு படித்த மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், திருவண்ணாமலை, சென்னை, ஒசூா், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று மாணவிகளுக்கு நோ்காணல் நடத்தி 208 மாணவிகளை பணிக்குத் தோ்வு செய்தனா். இவா்களுக்கு கல்லூரிச் செயலா் சம்பூா்ணமேரி பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்து பேசினாா்.

பணி நியமன ஆணை பெற்ற மாணவிகள் நிறுவனம் குறிப்பிட்ட தேதியில் பணியில் சோ்ந்து கல்லூரிக்கும், பேராசிரியா்களுக்கும், பெற்றோருக்கும் நற்பெயரை பெற்றுத்தர வேண்டும் என்றாா். கல்லூரி முதல்வா், கல்லூரி நிா்வாகி, பேராசிரியா்கள் உடனிருந்தனா்.