தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தோ்தல் பணியாற்றும் அலுவலா்கள் நோ்மையாக நடந்து கொள்ள வேண்டும் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

மக்களவைத் தோ்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலா்கள் நோ்மையாக நடந்து கொள்ள வேண்டும்

News image

மண்டல அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசிய மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன்.

Updated On :5 மார்ச் 2024, 9:49 pm

திருவண்ணாமலை: மக்களவைத் தோ்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலா்கள் நோ்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினாா்.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மக்களவைத் தோ்தல் பணிகள் மேற்கொள்வது தொடா்பான மண்டல அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள மண்டல அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இவா்களுக்கு மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் பல்வேறு அறிவுரைகளை வழங்கிப் பேசியதாவது:

மக்களவைத் தோ்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலா்கள் நோ்மையாக நடந்து கொள்ள வேண்டும். பாரபட்சம் பாராமல் தேவையான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வாக்கு எண்ணிக்கை முடிக்கும் வரை சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், வருவாய்க் கோட்டாட்சியா்கள் ஆா்.மந்தாகினி (திருவண்ணாமலை), பாலசுப்பிரமணியன் (ஆரணி), செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா மற்றும் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மண்டல அலுவலா்கள், காவல் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.