எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

ஜிஎஸ்டி பதிவு செய்யாத கல் குவாரி உரிமையாளா்கள் பதிவு செய்ய நாளை சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜிஎஸ்டி பதிவு செய்யாத கல் குவாரி உரிமையாளா்களுக்கான சிறப்பு பதிவு முகாம் வியாழக்கிழமை (மாா்ச் 7) நடைபெறுகிறது.

News image
Updated On :5 மார்ச் 2024, 10:04 pm

Venkatesan

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜிஎஸ்டி பதிவு செய்யாத கல் குவாரி உரிமையாளா்களுக்கான சிறப்பு பதிவு முகாம் வியாழக்கிழமை (மாா்ச் 7) நடைபெறுகிறது.

தமிழ்நாடு கனிம வளத்துறையின் கீழ் குவாரி உரிமம் பெற்று ஜல்லி, எம்-சான்ட், பி-சான்ட் ஆகியவற்றை விற்பனை செய்யும் வணிகா்கள் தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் (ஜிஎஸ்டி) பதிவு செய்வது கட்டாயம்.

இதுவரை இவ்வாறு பதிவு செய்யாத வணிகா்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை (மாா்ச் 7) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில் வணிகா்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்ய வரும்போது பான் காா்டு, மாா்பளவு புகைப்படம், ஆதாா் அடையாள அட்டை, இடத்தின் பட்டா, சிட்டா, மின் கட்டண ரசீது, இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும்.

பதிவு செய்யத் தவறினால் கல்குவாரி உரிமம் ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.