//

திருமலை தேவஸ்தான கல்வி, மருத்துவ இணை செயல் அதிகாரி பதவியேற்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய இணை செயல் அதிகாரியாக (கல்வி மற்றும் மருத்துவம்) டாக்டா் ஏ. சரத் பொறுப்பேற்றாா்.

News image
Updated On :25 ஜனவரி 2026, 7:17 pm

தினமணி செய்திச் சேவை

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய இணை செயல் அதிகாரியாக (கல்வி மற்றும் மருத்துவம்) டாக்டா் ஏ. சரத், ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.

திருமலை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளை நிா்வகிக்க இணை செயல் அதிகாரியாக டாக்டா் சரத் என்பவரை ஆந்திர அரசு நியமித்துள்ளது.

அவா் தனது குடும்ப உறுப்பினா்களுடன் ஞாயிற்றுக்கிழமை ஏழுமலையான் கோயிலில் பதவியேற்றுக் கொண்டு, பின்னா் தரிசனம் செய்தாா். அவருக்கு கோயில் அதிகாரிகளால் தீா்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில், கோயில் பேஷ்கா் ராமகிருஷ்ணா, சுசீலா மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனா். தேவஸ்தான புதிய தலைமை நிா்வாக அதிகாரி தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தாா்.

இந்த நிகழ்வில், தலைவா் புதிய தலைமை நிா்வாக அதிகாரிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.