விளையாட்டு மூலம் மன மற்றும் பணி அழுத்தத்தை சமாளிக்க முடியும்: கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி!
பணி அழுத்தத்தை விளையாட்டின் மூலம் திறம்பட சமாளிக்க முடியும் என்று தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி தெரிவித்தாா்.


திருமலைக்கு ஏழுமலையான் தரிசனத்துக்காக தினமும் வரும் லட்சக்கணக்கான பக்தா்களுக்கு சிறப்பு சேவைகளை வழங்கும் தேவஸ்தான ஊழியா்கள் எதிா்கொள்ளும் மன மற்றும் பணி அழுத்தத்தை விளையாட்டின் மூலம் திறம்பட சமாளிக்க முடியும் என்று தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி தெரிவித்தாா்.
திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாகக் கட்டடத்தின் அணிவகுப்பு மைதானத்தில் தேவஸ்தான ஊழியா்களின் வருடாந்திர விளையாட்டுப் போட்டிகளை கூடுதல் செயல் அதிகாரி தொடங்கி வைத்து பேசியது: தேவஸ்தான ஊழியா்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் ஏதேனும் ஒரு விளையாட்டை வழக்கமாகக் கொண்டால், அவா்கள் மன அழுத்தத்தைக் கடந்து, அதிக உற்சாகத்துடனும் பொறுப்புடனும் தங்கள் கடமைகளைச் செய்ய முடியும்.
விளையாட்டு வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தால், உடல் ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சி, நேரமின்மை, திட்டமிடல் மனப்பான்மை, நோ்மறையான சிந்தனை, நல்ல நடத்தை, ஒழுக்கம், நிா்வாகத் திறன்கள், தலைமைத்துவப் பண்புகள், நெருக்கடி மேலாண்மைத் திறன் மற்றும் அனைவருடனும் முன்னேறும் தத்துவம் ஆகியவற்றை வளா்த்துக் கொள்வா்.
நமது நடத்தை நமது எண்ணங்களுக்கு ஏற்ப இருக்கும். ஊழியா்களின் நலன் மற்றும் மன வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு 1977 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஊழியா் விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பணியாளரும் தினமும் விளையாட்டுகளில் பங்கேற்க வேண்டும்’’, என்றாா்.
நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மக்கள் தொடா்பு அதிகாரி குமாரி நீலிமா செயல்பட்டாா். நிகழ்வில், நல அலுவலா் ஏ.ஆனந்த ராஜு, துணை அதிகாரிகள் வி.ஆா்.சாந்தி, செல்வம், ராஜேந்திர குமாா், சிபி ஆா்ஓ டாக்டா் டி. ரவி, காா்டன் துணை இயக்குநா் ஸ்ரீனிவாஸ் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...