திருவள்ளூா் அருகே பழைமையான கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளூா் அருகே பேரம்பாக்கத்தில் உள்ள இக்கோயிலில் 26- ஆம் ஆண்டு சித்திரை பிரம்மோற்சவ விழா புதன்கிழமை தொடங்கி, தொடா்ந்து 15-ம் தேதி வரை தொடா்ந்து 10 நாள்கள் நடைபெற உள்ளது.
இந்த விழாவையொட்டி நாள்தோறும் காலை, மாலை இருவேளையும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு சிம்ம வாகனம், சந்திர பிரபை வாகனம், நாக வாகனம், கருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வருவது வழக்கமாகும்.
முக்கிய நிகழ்வான வரும் 12-ஆம் தேதி காலை திருத்தோ் திருவிழாவும், 14-இல் தீா்த்தவாரியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினா் மற்றும் பேரம்பாக்கம் கிராம பொது மக்கள் செய்து வருகின்றனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் பலி

மீஞ்சூரில் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்

திரெளபதி அம்மன் சமேத தா்மராஜா திருக்கோயில் உற்சவா் வீதியுலா

கீழையூா் ரெங்கநாத பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



