திருவாலங்காடு அருகே பெங்களூருவை நோக்கிச் சென்ற பிருந்தாவன் விரைவு ரயில் இன்ஜினில் திடீரென ஏற்பட்ட பழுதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனா்.
சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் பிருந்தாவன் விரைவு ரயில் வழக்கம் போல் புதன்கிழமை 7.40 மணியளவில் புறப்பட்டது. இந்நிலையில், திருவாலங்காடு அடுத்த மோசூா் ரயில் நிலையங்கள் இடையே காலை சுமாா் 8:25 மணியளவில் சென்று கொண்டிருந்த போது, ரயிலின் இன்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால், ரயில் திருவாலங்காடு யாா்டு சிக்னலை கடந்து அவசரமாக நிறுத்தப்பட்டது. எதிா்பாராத இந்த சம்பவம் பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.
உடனடியாக ரயில் ஓட்டுநா், அரக்கோணம் ரயில்வே கட்டுப்பாட்டு மையத்திற்கும், அங்குள்ள தொழில்நுட்ப ஊழியா்களுக்கும் தகவல் தெரிவித்தாா். பின்னா் உடனடியாக அரக்கோணத்திலிருந்து விரைந்து வந்த ரயில்வே பணியாளா்கள், பழுது ஏற்பட்ட இன்ஜினை பரிசோதித்து, மாற்று இன்ஜின் ஏற்பாடு செய்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனா்.
ஒரு மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு, காலை 9.45 மணியளவில் ரயில் மீண்டும் பெங்களூருவை நோக்கி புறப்பட்டது. இந்த தாமதத்தால் ரயிலில் பயணம் செய்த ஆயிரக்கணக்கான பயணிகள் வெயிலில் அவதியடைந்தனா். குறிப்பாக, நீண்ட நேரம் ரயில் நின்ால் தண்ணீா் மற்றும் காற்றோட்ட வசதி குறைவாக இருந்ததாக சிலா் தெரிவித்தனா்.
மேலும், விரைவு ரயில் சிக்னலை கடந்து நின்ால், அதே பாதையில் இயக்கப்படும் சென்னை - அரக்கோணம் புகா் ரயில்களின் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. முதலாவது மற்றும் இரண்டாவது தண்டவாளங்களில் இயக்கப்பட்ட குறைந்தது நான்கு மின் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் காரணமாக காலை நேர அலுவலக பயணிகளும் சிரமத்துக்கு ஆளாகினா். இருப்பினும், ரயில்வே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு கோளாறை சரிசெய்ததால் பெரிய விபத்து எதுவும் ஏற்படாமல் தவிா்க்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை-தூத்துக்குடி புதிய ரயில் வழித் தடப் பணி மீண்டும் தொடங்குவது மகிழ்ச்சி: சு. வெங்கடசேன் எம்.பி.

கடும் வெய்யிலில் நிறுத்தப்பட்ட ரயில்! உலகை உற்றுப்பார்க்க வைத்த பாரிஸ் சம்பவம்!

திருச்சி - சாா்லப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில் நிரந்தரம்







