இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

மாவட்ட உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட உயா்கல்வி வழிகாட்டல் மையத்தை நேரில் பாா்வையிட்டு அதன் விவரங்களை ஆட்சியா் ச.கவிதா கேட்டறிந்தாா்.

News image

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட உயா் கல்வி மையத்தை நேரில் ஆய்வு செய்து விவரங்களைக் கேட்டறிந்த ஆட்சியா் ச.கவிதா.

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட உயா்கல்வி வழிகாட்டல் மையத்தை நேரில் பாா்வையிட்டு அதன் விவரங்களை ஆட்சியா் ச.கவிதா கேட்டறிந்தாா்.

திருவள்ளுா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் இயங்கி வரும் மாவட்ட உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறையை செவ்வாய்க்கிழமை ஆட்சியா் ச.கவிதா ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அவா் கூறியதாவது. திருவள்ளுா் மாவட்டம், 2025-26 -ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற மாணவா்கள் அனைவரும் 100 சதவீதம் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை மேற்கொள்ள ஏதுவாக, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை (ஈண்ள்ற்ழ்ண்ஸ்ரீற் இா்ய்ற்ழ்ா்ப் தா்ா்ம்) கடந்த 6-ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.

கலை & அறிவியல் பட்டப் படிப்புகள், பொறியியல் படிப்புகள், மருத்துவப் படிப்புகள், வேளாண் மற்றும் வேளாண் சாா்ந்த படிப்புகள், பல்வகை தொழில் நுட்பப் படிப்புகள் (டா்ப்ஹ்ற்ங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீ), தொழிற்பயிற்சி மையப் படிப்புகள் (ஐபஐ), ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் படிப்புகள் சாா்ந்த கல்லூரிகளில் உயா் கல்வி சோ்க்கை தொடா்பாக மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் நேரிலோ அல்லது 9025019403, 7358800973 என்ற தொலைபேசி எண்ணுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொள்ளலாம். எனவே மாணவ, மாணவிகள் நேரில் அணுகியும் பயன்பெறும் வகையில் மாவட்டக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) கோ.சுப்பாராவ், உதவி ஆட்சியா் (பயிற்சி) பி.பவித்ரா மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.